அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Deepak Jacob Ias
Thiru Deepak Jacob Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
15 அக்., 2026PR #849
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி (Semiconductor) மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் குறைக்கடத்தி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு குறைக்கடத்தி (Semiconductor) சூழலமைப்புத் திட்டத்தை வெளியிட்டார். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தித் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.