TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru V Rajaraman

Thiru V Rajaraman தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

14 நவ., 2026PR #1063

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. ந. ஆனந்த், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா ஆகியோர் இன்று (14.11.2026) சென்னை, கிண்டி, கத்திபாரா சந்திப்பில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.