TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
நினைவு விழா; மரியாதை; வரலாற்று நிகழ்வு

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னையில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விரிவான சுருக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, 11.07.2026 அன்று, மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ஆகியோர் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அழகு முத்துக்கோன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் - பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு 11.07.1710 அன்று மகனாகப் பிறந்தார். இவர் ஜெக வீரராம எட்டப்பநாயக்கரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். நெல்லைச் சீமையில் ஆங்கிலேயர்கள் நேரடியாக வரிவசூலித்ததை 1755 ஆம் ஆண்டு எதிர்த்து, எட்டையபுரம் மன்னரிடம் கடுமையாக வாதிட்டார். மன்னர் வரிகட்ட மறுத்ததால், 1756-ஆம் ஆண்டு கான்சாகிப் என்பவர் நெல்லைச் சீமைக்குக் கமாண்டராக நியமிக்கப்பட்டார். கான்சாகிப் எட்டையபுரத்தைத் தாக்கியதை அடுத்து, அழகு முத்துக்கோன் மாவேலி ஓடை மற்றும் பெத்தநாயக்கனூர் பகுதிகளிலிருந்து வீரர்களைத் திரட்டி, வெங்கடேஸ்வர எட்டப்பர் தலைமையில் போரிட்டார். 1759 ஆம் ஆண்டு கான்சாகிப் திடீர் தாக்குதல் நடத்தி அழகு முத்துக்கோனையும் அவரது படையினரையும் சிறை பிடித்தார். மன்னிப்பு கேட்டால் உயிர்ப்பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்தபோது, 'அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர்விடுவோம்' என்று கம்பீரமாக முழக்கமிட்டார். பின்னர், இவரும் இவருடன் இருந்த ஏழு வீரர்களும் பீரங்கி வாயில் கட்டி சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் விடுதலைக்கான விதையை விதைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் இவரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் திரு. க.வி.விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்(பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண்தம்புராஜ்,இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், அன்னாரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Announcements & Press Releases