தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech) தரவரிசைப்பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech) தரவரிசைப்பட்டியல் 30.07.2026 அன்று வெளியிடப்பட்டது.
விரிவான சுருக்கம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியல் 30.07.2026 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி. செ. கமலி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் அரசு செயலர் திருமதி. அனு ஜார்ஜ், இ.ஆ.ப., பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர்(பொறுப்பு) முனைவர். இர. நரேந்திரபாபு மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர். ச.மு.க. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் (B.V.Sc & A.H. மற்றும் B.Tech) விவரங்களும் வெளியிடப்பட்டன. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Online Counselling) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.07.2026 முதல் 02.08.2026 வரை 044-29997349 மற்றும் 044-29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026–27ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & A.H) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (B.Tech) தரவரிசைப்பட்டியல் வெளியீடு.
- 2தரவரிசைப்பட்டியல் 30.07.2026 அன்று காலை 10.00 மணிக்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி. செ. கமலி அவர்களால் வெளியிடப்பட்டது.
- 3முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.
- 4தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தரவரிசைப்பட்டியலை https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in இணையதளங்களில் காணலாம்.
- 5மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Online Counselling) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.
- 6தரவரிசைப் பட்டியலில் உள்ள சந்தேகங்களுக்கு 31.07.2026 முதல் 02.08.2026 வரை தொலைபேசி எண்கள் (044-29997349, 044-29997348) அல்லது மின்னஞ்சல் (admission@tanuvas.org.in) மூலம் தொடர்பு கொள்ளலாம்.