TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாநிலங்களுக்கு இடையேயான நீர்வள மேலாண்மை, அரசு சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விஜயவாடாவில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் இந்த நல்வாய்ப்பிற்கும், விஜயவாடாவில் அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்கும் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள், குறிப்பாக, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பொருண்மைகளில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரிவித்தார். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமானது, இரு மாநிலங்களுக்கும் மேற்பரப்பு நீர் இருப்பை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகால வாய்ப்பாக அமைகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இத்திட்டம் அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் பயனளிப்பதுடன், விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து, குடிநீர்ப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டதோடு, இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் தான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு, குறிப்பாகச் சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிப்பது குறித்தும் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். கால்வாய் மூலம் வழங்கப்படும் கிருஷ்ணா நீர், சென்னையின் குடிநீர்ப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், இன்றைய நிலவரப்படி, சென்னையின் ஐந்து குடிநீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது சுமார் 35 சதவீதமே உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், நடப்பு நீர் ஆண்டில், கூடுதலாக தண்ணீரை விடுவிக்குமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புன்னமி காட் பகுதியில் நடைபெறும் 'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாலோசனை.
  • 2
    சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்து கலந்தாலோசனை.
  • 3
    கோதாவரி-காவிரி இணைப்புத் திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
  • 4
    இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் தான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • 5
    நடப்பு நீர் ஆண்டில், கூடுதலாக தண்ணீரை விடுவிக்குமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
  • 6
    'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • 7
    விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்