TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பொது வசதி திறப்பு விழா

கோயம்புத்தூரில் ரூ.301.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் 301 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைத்தார். இது 6 ஏக்கர் 96 சென்ட் நிலத்தில், தரை மற்றும் ஏழு தளங்களுடன், 1,98,000 சதுர அடி கட்டடப் பரப்பளவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத் தரத்தில் நூலகம் மற்றும் அறிவியல் மையமாக கட்டப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் 301 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைத்தார். இது 6 ஏக்கர் 96 சென்ட் நிலத்தில், தரை மற்றும் ஏழு தளங்களுடன், 1,98,000 சதுர அடி கட்டடப் பரப்பளவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத் தரத்தில் நூலகம் மற்றும் அறிவியல் மையமாக கட்டப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்தின் தரைத்தளத்தில் 356 இருக்கைகளுடன் கூடிய கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 90 இருக்கைகளுடன் கூடிய கோளரங்கம் மற்றும் விண்வெளிப்பயண மின் தூக்கியும், முதல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையமும், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவும், மூன்றாம் தளத்தில் போட்டி தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகமும், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவும், ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்களில் ஆங்கில புத்தகப் பிரிவு மற்றும் தொழில் முனைவோர் மையமும் (இன்குபேஷன் சென்டர்), ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், திறந்தவெளி முற்றம் மற்றும் மின் நூலகமும், மேல் தளத்தில் 100 இருக்கைகளுடன் கூடிய வான்நோக்கு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தில், STEM ஆய்வகம், மெய்நிகர் காட்சி (Virtual Reality), மீநிகர் மெய்மை (Augmented Reality) உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்களும், செய்முறைகளுடன் கூடிய எண்ணற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. பெரியார் அறிவுலகத்தில், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், மொழியியல், கணிதம், அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், சமூகவியல், மேலாண்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சுமார் 1,00,000 நூல்கள் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், 130 நான்கு சக்கர வாகனங்கள், 450 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பயன்படுத்தும் வகையில் இந்நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெரியார் அறிவுலக வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு.ந.ஆனந்த், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க. விக்னேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., பொது நூலக இயக்குநர் திருமதி. ச. ஜெயந்தி, இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கோயம்புத்தூரில் 'பெரியார் அறிவுலகம்' மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறப்பு
  • 2
    தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்