TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சட்டம் ஒழுங்கு, நிவாரணம், பொது பாதுகாப்பு

தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி

தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இரங்கல் தெரிவித்து, நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

விரிவான சுருக்கம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் (வயது 57, எண்: 1447) அவர்கள், நேற்று (08.11.2026) இரவு, தனது பணியில் இருந்தபோது, சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்த போது அவர்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மாண்புமிகு முதலமைச்சர் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட உத்தரவு

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்