TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு ஊழியர் நலன், கொள்கை அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்தலாம்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுக்கு வரப்பெற்றது. குழந்தை பிறக்கும் காலகட்டம் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது என்றும், இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும். இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் 'தந்தையர் மகப்பேறுகால விடுப்பு' வழங்கியுள்ளது. அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ துய்த்துக் கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.
  • 2
    இந்த விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்தலாம்.

Archive navigation

Newer
புதுதில்லியில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல் "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.
Older
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்துவைத்து, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கித் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்