குறிச்சொல் செய்திகள்
#Autism
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Autism குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 ஜூலை, 2026PR #422
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள முன்காண் திரையரங்கில் முதன்முறையாக மன இறுக்கம் (Autism) கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (18.07.2026) தொடங்கி வைத்தார்கள்.
மன இறுக்கம் கொண்ட 40 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு, பொது இடங்களுக்குச் செல்லும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 'Finding Nemo' எனும் உயிர்பூட்டல் படம் திரையிடப்பட்டது.