TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Awards

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Awards குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

19 ஜூலை, 2026PR #424

தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

18 ஜூலை, 2026PR #421

தமிழ்நாடு நாள் விழா: மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது

ஜூலை 18, 2026 அன்று சென்னை, தரமணியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

6 ஜூலை, 2026PR #338

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்கும் கடைசி நாள் 13.07.2026 வரை நீட்டிப்பு

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பக் கடைசி நாள் 06.07.2026 அன்று முடிவடைந்த நிலையில், தற்போது 13.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 ஜூலை, 2026PR #330

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 2026

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. பல்வேறு பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் 31.07.2026 தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

30 ஜூன், 2026PR #314

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

29 மே, 2026

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் 2026 ஆகஸ்ட் 15 அன்று மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 25, 2026.