குறிச்சொல் செய்திகள்
#Chennai Traffic
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chennai Traffic குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 நவ., 2026PR #1077
மாண்புமிகு பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (17.11.2026) புதுதில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரும் விரிவான ஆவணத்தினை அளித்தார்.
தமிழ்நாட்டின் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விவாதித்து, ஒன்றிய திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் கோரினார்.