TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Child Labour

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Child Labour குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 ஜூன், 2026PR #221

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி

உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.

11 ஜூன், 2026PR #210

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினச் செய்தி

உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான ஜூன் 12-ஐ முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்குக் கல்வியையும், மகிழ்ச்சியான வாழ்வையும் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.