TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Commercial Complexes

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Commercial Complexes குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

4 நவ., 2026PR #988

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.1,003.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.17.56 கோடி செலவில் கொளந்தாகவுண்டனூர் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில் 17 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.