குறிச்சொல் செய்திகள்
#Dams
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Dams குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
15 ஜூலை, 2026PR #400
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.7.2026) சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
15 ஜூன், 2026PR #230
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்திற்காக தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் 17,000 ஏக்கர் நிலங்களுக்கு பயன் பெறும் வகையில், 2026 ஜூன் 16 முதல் 138 நாட்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I, சிற்றார் II அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.