குறிச்சொல் செய்திகள்
#Direct Paddy Procurement Centers
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Direct Paddy Procurement Centers குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
13 செப்., 2026PR #655
கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600 என்ற உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல்
நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.