#Electric Vehicles
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Electric Vehicles குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன பயிற்சி ஆய்வகங்களை அமைத்து மின்சார வாகன மற்றும் சூரிய ஆற்றல் தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் மற்றும் TNS India Foundation ஆகியோருக்கு இடையே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.11.2026 அன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வடசென்னை மற்றும் திண்டிவனம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நவீன சூரிய ஆற்றல் மின் ஆய்வகங்கள் அமைத்து, மின்சார வாகனங்கள் (EV), சூரிய ஆற்றல் தொழில்நுட்பம் மற்றும் பணியிடத் திறன்கள் தொடர்பான நவீன பயிற்சிகள் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படவுள்ளது.