TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Electricity Department

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Electricity Department குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

25 மே, 2026

கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.

இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.