TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Facilities

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Facilities குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

28 ஆக., 2026PR #596

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் M-3 புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.8.2026) சென்னை, புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று, சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறைவாசிகளுக்கான தொழிற்கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, சிறைவாசிகளிடம் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, M-3 புழல் காவல் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்து, பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.