#Industrial Development
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Industrial Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் துவக்கி வைத்தார்.
850 கோடி ரூபாய் முதலீட்டில் 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
செய்தி வெளியீடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (டான்செம்) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பது மற்றும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் குழு சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து, மாநிலத்தில் அவர்களின் தொழில் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். முதலமைச்சர் ராம்கோ குழுமத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.