TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Jal Shakti Ministry

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Jal Shakti Ministry குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

28 ஜூலை, 2026PR #456

காவிரி - மேகதாது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேகதாது திட்டத்திற்கு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும், கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.