#Justice
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Justice குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென, 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் இலக்குடன், போதை மருந்துகள் மற்றும் மன மயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்துவரும், தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
முந்தைய ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டும் வகையில்.
செய்தி வெளியீடு: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்குற்றச் செயலுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்குத் தண்டனை விதித்த தீர்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வரவேற்றுள்ளார்.
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு விரைவான விசாரணை மற்றும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதி பூண்டுள்ளது.