TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Pollution Control Board

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Pollution Control Board குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூலை, 2026PR #457

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1 பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.