குறிச்சொல் செய்திகள்
#Quit India Movement
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Quit India Movement குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
2 அக்., 2026PR #786
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் ஆகியோர் இன்று (02.10.2026) சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.