குறிச்சொல் செய்திகள்
#Student Hostels
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Student Hostels குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 செப்., 2026PR #723
சமூக நீதித்துறை சார்பாக ஆதிதிராவிட நல இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 24x7 கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் திறந்து வைத்தார்கள்
சமூகநீதி விடுதிகளில் குறைதீர்வை வலுப்படுத்தி, குறைகளை நேரடியாகவும் உடனடியாகவும் நிவர்த்தி செய்வதற்காக ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் இன்று (23.09.2026) ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் திறந்து வைத்தார். சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்கள் உணவு தொடர்பான புகார்கள் மற்றும் பிற குறைகளைப் பதிவு செய்து உடனடி தீர்வு பெற இது உதவும்.