குறிச்சொல் செய்திகள்
#Wastewater
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Wastewater குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 ஜூலை, 2026PR #452
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.