உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
காவல்துறை செய்திகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சிறை சீர்திருத்தங்கள் மற்றும் மதுவிலக்கு கொள்கைகள்.
தமிழ்நாட்டில் மது விற்பனை மற்றும் கிளப் செயல்பாடுகளுக்கான புதிய விதிகள்
தமிழ்நாடு அரசு, FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற வளாகங்களுக்குக் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில், மது விற்பனைக்கு குறைந்தபட்ச வயது 21, FL2 கிளப்களுக்கு உறுப்பினர் அட்டைகள் கட்டாயம், வேலை நேரக் கட்டுப்பாடு, மற்றும் கிளப்களில் மதுக்கடைகள் மட்டுமே முக்கியச் செயலாக இருக்கக் கூடாது என்பவை அடங்கும்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (09.06.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைக்கும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை வெளியிட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார்.
டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் க.விக்னேஷ் தலைமையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆய்வு; கடுமையான அமலாக்கத்திற்கான அறிவுறுத்தல்கள்
மாண்புமிகு அமைச்சர் க.விக்னேஷ் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்து, கள்ளச்சாராயம் ஒழிப்பு, மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபான ஆலைகள் விதிமுறைப் படி இயங்குவதை உறுதிசெய்ய, அனைத்து மாவட்டங்களுக்கும் கடுமையான அமலாக்கத்திற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து ஆய்வு நடத்தினார்
மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மூடப்பட உத்தரவிடப்பட்ட 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து ஆய்வு நடத்தினார். இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளன.