TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், விவசாயம் மற்றும் நலத்திட்ட அறிவிப்புகள்.

12 ஜூன், 2026PR #218

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

13 மே, 2026

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.