Government Secretary
Government Secretary தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாணாக்கர்களுக்கான உணவுக்கட்டணம் உயர்வு – 1,16,424 மாணாக்கர்கள் பயன்பெறுவர்
சமூகநீதித் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாத உணவுக்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,16,424 மாணாக்கர்கள் பயன்பெறுவர். அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை கூடுதல் செலவினமாக ரூ.29.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊட்டச்சத்துமிக்க திருத்தப்பட்ட உணவுப்பட்டியல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்
தமிழ்நாடு அரசு, கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பதக்கம் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் 2027 குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும்.