கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்
தமிழ்நாடு அரசு, கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பதக்கம் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் 2027 குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும்.
விரிவான சுருக்கம்
மத நல்லிணக்கத்திற்காக உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது இப்பதக்கம் வழங்கப்படுகிறது. ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்)க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெற தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. 2027 ஜனவரி 26 அன்று குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 15.12.2026-க்கு முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2027 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது
- 2விருது ரூ.5,00,000 ரொக்கப் பரிசு, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது
- 3முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது விருது வழங்கப்படும்
- 42027 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- 5விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.12.2026 ஆகும்
- 6விருது 26.01.2027 அன்று வழங்கப்படும்
- 7மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு ஏதுமின்றி தகுதியுடையவராவர்
- 8அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தகுதியானவர் தெரிவு செய்யப்படுவார்