Pandit Jawaharlal Nehru
Pandit Jawaharlal Nehru தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. ந. ஆனந்த், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா ஆகியோர் இன்று (14.11.2026) சென்னை, கிண்டி, கத்திபாரா சந்திப்பில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது அன்பிற்குரிய குழந்தைகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கும் கேக்குகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புப் பொங்கல் வழங்கினார்.
கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் வனவிலங்கு வார நிறைவு விழா
கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் வனவிலங்கு வார நிறைவு விழா நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் திரு. ஆர். வி. ரஞ்சித் குமார் கலந்து கொண்டார். வனவிலங்கு ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைத்தல், கடல் ஆமை பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிடுதல் மற்றும் பாம்பு மீட்பு கருவிகள் விநியோகம் செய்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.