TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு நிகழ்வு; சமூக நலன்; கல்வி

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கும் கேக்குகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புப் பொங்கல் வழங்கினார்.

விரிவான சுருக்கம்

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இன்று (13.11.2026) சென்னை, பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், அப்பள்ளியில் மழலையர் கல்வி (எல்.கே.ஜி) முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 537 மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அப்பள்ளியின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் 40 குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கி, வாழ்த்துக்களைத் தெரிவித்து, மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 9 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என மொத்தம் 61,84,566 நபர்களுக்கு கேக்குகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மாணாக்கர்களுக்குத் தலா இரண்டு பாக்கெட்டுகள் வீதம் மொத்தம் 45 கிராம் எடையுள்ள கேக்குகளும், பிற மாவட்டங்களில் மாணாக்கர்களுக்குத் தலா ஒரு பாக்கெட் வீதம் 45 கிராம் எடையுள்ள கேக்குகளும் வழங்கப்பட்டன. இப்பணிகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன. மேலும், கேக்குகளின் தரம் உணவுப் பாதுகாப்புத் துறையால் சரிபார்க்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் இயங்கிவரும் அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 2 வயது முதல் 6 வயது வரையிலான 11,11,022 குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளையும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலையும் வழங்கினார்கள். இவ்விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி, மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி எம்.ஆர். பல்லவி, திரு. ரேவந்த் சரண், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு. வி. சிவா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் திருமதி ம. பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை செயலாளர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் மரு. சா. சங்கீதா, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 61,84,566 மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் விநியோகம்.
  • 2
    தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் 2 வயது முதல் 6 வயது வரையிலான 11,11,022 குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் விநியோகம்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்