TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Vaishali

Vaishali தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

8 அக்., 2026PR #809

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் 'Dream Olympics' திட்டத்தைத் தொடங்கி வைத்து, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் 'Dream Olympics' திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், தேசிய சப்-ஜூனியர் மகளிர் கூடைப்பந்துப் போட்டிகளில் பதக்கம் வென்ற மற்றும் பாரா ஆசியப் போட்டிகளில் பங்கேற்கும் 32 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ₹8.57 கோடி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

27 செப்., 2026PR #748

46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

20 ஜூலை, 2026PR #425

உலக சதுரங்க நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியதில் சாதனை படைத்துள்ளது என்றும், இளம் தலைமுறையினருக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

27 மே, 2026

மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், 27.05.2026 அன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.