TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

செய்தி வெளியீடு

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாகவும், கூடுதல் நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு. கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு. ரஜ்னிஷ் பதியில், திரு. ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே. முத்துக்குமார், திரு. ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோருக்கும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு. ரவீக்குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி. சுமதி, திருமதி எஸ். அல்லி, திருமதி சி. திருமகள், திரு. சண்முகம் கார்த்திகேயன், திரு. முருகேசன் பாலுச்சாமி, திரு. என். குணசேகரன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்குமாறு தங்களது பணி சிறக்கட்டும்!

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகள் நியமனம்
  • 2
    சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்
  • 3
    தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்