நினைவுநாள்
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
முக்கிய நபர்கள்S. Joseph Vijay, Ondiveeran
மூலம்அசல் கோப்பு (PDF)
விரிவான சுருக்கம்
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்! மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம். வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
முக்கிய அறிவிப்புகள்
- 1விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவு
- 2ஒண்டிவீரனின் வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றுதல்
- 3தாய்நாட்டு விடுதலைக்காக ஒண்டிவீரன் செய்த தியாகத்தை நினைவுகூருதல்