TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

விருது வழங்குதல்

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ் கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ. சிரிஷா அவர்களிடம் 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ. சிரிஷா அவர்களிடம் 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். ஆண்டுதோறும் வீரதீரச் செயலுக்கான 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதுக்கான பரிந்துரைகள் அனைத்து மாநில அரசுகளிடமிருந்தும் ஒன்றிய அரசால் பெறப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களால் விருதுதாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். கடந்த 5.3.2025 அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதிய உணவு இடைவேளையின்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதான சிறுவன் நிதின், பள்ளி வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த விவசாயப் பண்ணைக் குட்டையில் தற்செயலாக வழுக்கி விழுந்தான். அச்சிறுவன் ஆபத்தான நிலையில் தத்தளித்து, நீரில் மிதக்கப் போராடுவதைக்கண்ட திரு. பி.எஸ்.கௌரிசங்கர் ராஜா அவர்கள், அச்சிறுவனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இருவரும் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். மறைந்த பி.எஸ்.கௌரிசங்கர் ராஜா அவர்களின் வீரதீரச் செயல், அசாதாரண துணிச்சல், உன்னத தியாகம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அவர் மரணத்திற்குப் பிந்தைய 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி திருமதி கொ. சிரிஷா அவர்களிடம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வீரதீரச் செயலுக்கான ஒன்றிய அரசின் 'சர்வோத்தம் ஜீவன் ரக்க்ஷா' விருதிற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் திருமதி எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப. மற்றும் துணைச் செயலாளர் (மரபு) திரு. ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மற்றும் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவிக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்பட்டது.
  • 2
    பி.எஸ். கௌரிசங்கர் ராஜாவின் வீரதீரச் செயல் மற்றும் தியாகம் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்