TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Headmaster

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Headmaster குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 ஆக., 2026PR #587

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயலுக்கான சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருது - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த தலைமை ஆசிரியர் பி.எஸ் கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' விருதினைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், எலுவப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் பி.எஸ். கௌரிசங்கர் ராஜா அவர்களின் மனைவி திருமதி கொ. சிரிஷா அவர்களிடம் 'சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா' (மிகச்சிறந்த உயிர்ப் பாதுகாப்பு) விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.