சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெற 05.10.2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பெறுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 05.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
விரிவான சுருக்கம்
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் 05.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது. இத்திட்டத்தின் கீழ், 33 வகைப்பாடுகளின் வாயிலாகப் பரிசுப்போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.50,000/-ம், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.25,000/-ம் என ஒரு நூலுக்கு ரூ.75,000/- பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும். விண்ணப்பங்களை துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம்செய்து பரிசுக்குரிய விதிமுறைகளின்படி நிறைவு செய்து நூல்களுடன் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான தன் முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- "தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை" என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்: 05.10.2026. அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008. தொலைபேசி எண்கள்: 044 – 28190412, 28190413.
முக்கிய அறிவிப்புகள்
- 1சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 05.10.2026 வரை நீட்டிப்பு.
- 22025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கு ரூ.50,000/-ம், பதிப்பகத்தார்களுக்கு ரூ.25,000/-ம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
- 333 வகைப்பாடுகளில் நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
- 4விண்ணப்பப் படிவங்கள் துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
- 5விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும், ரூ.100/- போட்டிக் கட்டணமும் ("தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை" என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) இணைக்கப்பட வேண்டும்.