TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

கல்வி மற்றும் நலத்திட்டங்கள்

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026–2027)

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் 10 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு தலா ரூ.36.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விரிவான சுருக்கம்

இத்திட்டத்தின் கீழ் 2026–2027 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional Offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 15/10/2026 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    10 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
  • 2
    ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
  • 3
    விண்ணப்பதாரர்கள் உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
  • 4
    பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • 5
    பட்டப் படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 6
    விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 15/10/2026.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்