TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வேளாண்மை, மக்கள் நலன், கொள்முதல்

கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் Whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம்

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 9500801465 அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026–2027ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 01.09.2026 முதல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு 03.09.2026 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை 15.09.2026 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750/- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600/- க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும் போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ புகார் தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் "உழவர் உதவி மைய Whatsapp எண். 9500801465-ல்" புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நெல்லுக்கான ஊக்கத் தொகை உயர்வு: சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்வு.
  • 2
    நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க "உழவர் உதவி மைய Whatsapp எண். 9500801465" அறிவிப்பு.
  • 3
    நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை வெளியீடு.
  • 4
    நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750/- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600/- க்கும் கொள்முதல்.
  • 5
    03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Archive navigation

Newer
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி "கல்வியைக் கொண்டாடுவோம்" சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
Older
செய்தி வெளியீடு - வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்