TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு கூட்டம்விற்பனை மேம்பாடு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

விரிவான சுருக்கம்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் (23.09.2026) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர் (வடிவமைப்பு & உற்பத்தி) ஆகியோர் கலந்துகொண்டனர். தீபாவளி விற்பனை 2026 தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை இலக்கு, மண்டலவாரியான விற்பனை முன்னேற்றம், விற்பனை நிலையங்களின் செயல்பாடுகள், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தயாரிப்புகளை காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், புதிய வடிவமைப்புகள் மற்றும் தரமான கைத்தறி துணிவகைகளை அறிமுகப்படுத்துதல், போதுமான அளவு சரக்குகளை இருப்பில் வைத்திருத்தல், சிறந்த சேவையை வழங்குதல் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மண்டலவாரியாக நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்குகளை எய்திடவும், கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திடவும், விற்பனை நிலையங்கள் இலாபகரமாக செயல்படவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் திருமதி ஆர். லில்லி, இஆப., மற்றும் கைத்தறித்துறை இயக்குநர் / கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் (மு.கூ.பொ) திருமதி பி. உமா மகேஸ்வரி, இஆப., மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி நிர்ணயிக்கப்பட்டது
  • 2
    புதிய வடிவமைப்புகள் மற்றும் தரமான கைத்தறி துணிவகைகளை அறிமுகப்படுத்துதல்
  • 3
    விற்பனை நிலையங்களில் போதுமான அளவு சரக்குகளை இருப்பில் வைத்திருத்தல்
  • 4
    வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல்
  • 5
    கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்
  • 6
    கைத்தறி நெசவாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல்
  • 7
    விற்பனை நிலையங்கள் இலாபகரமாக செயல்பட வழிவகை செய்தல்

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்