TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

சுகாதாரம்பொது விழிப்புணர்வுஅரசு முன்முயற்சிகள்

தேசிய தன்னார்வ இரத்த தான நாள் செய்தி - 2026

தமிழ்நாடு அரசு அக்டோபர் 1, 2026 அன்று 'தேசிய தன்னார்வ இரத்த தான நாள்' அனுசரிக்கப்படுவதாகவும், 'மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்போம்' என்ற மையக்கருத்துடன், மாநிலம் முழுவதும் தன்னார்வ இரத்த தானத்தை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் அறிவிக்கிறது.

விரிவான சுருக்கம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி 'தேசிய தன்னார்வ இரத்த தான தினம்' அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வமாக இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, தொடர்ந்து இரத்த தானம் செய்யும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டிற்கான மையப்பொருள்: 'மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்போம்'. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற இரத்த மையங்கள் மூலம் தன்னார்வ இரத்த தான முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2025-2026ஆம் ஆண்டில் 359 இரத்த மையங்கள் மூலம் 9,53,638 இரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசு இரத்த மையங்கள் மூலம் 4,874 தன்னார்வ இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் முழு இரத்தம் தேவைக்கேற்ப இரத்தக் கூறுகளாகப் பிரிக்கப்படுவதன் மூலம், பல நோயாளிகள் பயன்பெறுகிறார்கள். பிரிக்கப்பட்ட சிவப்பணுக்கள் 35 முதல் 42 நாட்கள் வரையும், பிளாஸ்மா கூறுகள் ஒரு ஆண்டு வரையும் உரிய முறையில் சேமித்து பயன்படுத்த முடியும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் தன்னார்வ இரத்த தானத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சட்டமன்ற பேரவை அறிவிப்புகளில், மூன்று புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவைகள்: 1. தமிழ்நாடு அரியவகை இரத்தப் பிரிவு கொடையாளர் பதிவேடு உருவாக்குதல். 2. மாவட்ட அளவில் ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை உறுதிப்படுத்துதல். 3. கல்லூரிகளில் இரத்தக் கொடையாளர் மன்றங்கள் உருவாக்குதல். இதன் மூலம் அரிய இரத்தப் பிரிவு கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான நேரத்தில் இரத்தம் கிடைப்பதும், மாநிலம் முழுவதும் தன்னார்வ இரத்த தான இயக்கம் ஒருங்கிணைக்கப்படுவதும் உறுதி செய்யப்படும். மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1 சதவிகித மக்களுக்கு தேவைப்படும் இரத்த அலகுகள் இருப்பை உறுதி செய்வதை இலக்காக கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள இரத்த தானம் செய்யத் தகுதியுடைய அனைவரும் தன்னார்வமாக இரத்த தானம் செய்ய முன்வந்து உயிர்காக்கும் இந்த உன்னத சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு அரியவகை இரத்தப் பிரிவு கொடையாளர் பதிவேடு உருவாக்குதல்.
  • 2
    மாவட்ட அளவில் ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை உறுதிப்படுத்துதல்.
  • 3
    கல்லூரிகளில் இரத்தக் கொடையாளர் மன்றங்கள் உருவாக்குதல்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்