தரநிலைகள் மூலம் மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தியை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய BIS-ன் தரநிலைத் திருவிழா – 2026
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் உலக தரநிலைகள் தினத்தை முன்னிட்டு (14.10.2026) சென்னை கிண்டியில் நடைபெற்ற "தரநிலைத் திருவிழா 2026" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். "நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - இலக்கு 7: மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தி" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், எரிசக்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் தரநிலைகளின் முக்கியப் பங்கு எடுத்துரைக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், பொது நலன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தரநிலைகள் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறி, BIS-இன் பங்கினை அமைச்சர் பாராட்டினார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் இன்று (14.10.2026) உலக தரநிலைகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில், இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards - BIS) சார்பில் நடைபெற்ற "தரநிலைத் திருவிழா 2026" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவின் இந்த ஆண்டின் கருப்பொருளான "சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை: நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தரநிலைகள் - இலக்கு 7: மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தி" என்பதன் அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், எரிசக்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் தரநிலைகளின் முக்கியப் பங்கை எடுத்துரைக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகள் ஆற்றும் முக்கியப் பங்கை எடுத்துரைத்த அவர், தரநிலைகளை உருவாக்குவதிலும் அவற்றின் பயன்பாட்டை பல்வேறு துறைகளில் ஊக்குவிப்பதிலும் BIS-இன் பங்கினைப் பாராட்டினார். தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அத்தியாவசியத் தரத் தேவைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், பொது நலன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தரநிலைகள் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். மேலும், அரசுத் துறைகளில் தரநிலைகளைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு உணவுத்துறையிலும் தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குறிப்பாக, எரிசக்தித் துறையில் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகளின் முக்கியத்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், BIS முதுநிலை இயக்குநர் திரு. S.D. தயானந்த், தென் மண்டல துணை தலைமை இயக்குநர், திரு. M.A.J. வினோத் மற்றும் IIT மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் வெப்பப் பரிமாற்றம் மற்றும் வெப்ப ஆற்றல் ஆய்வகத்தின் V. பாலராமன் இருக்கைத் தலைமைப் பேராசிரியர் டாக்டர் K. சீனிவாச ரெட்டி; தேசிய சூரிய எரிசக்தி நிறுவனத்தின் (NISE) துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ஜெய் பிரகாஷ்; சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) இயக்குநர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன்; கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (IGCAR) அணு உலை வடிவமைப்புப் பிரிவு இயக்குநரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் K. நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1மலிவு விலை மற்றும் தூய்மையான எரிசக்தியை உறுதிப்படுத்துவதில் தரநிலைகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
- 2அரசுத் துறைகளில் தரநிலைகளைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம்.
- 3உணவுத்துறையிலும் தரநிலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
- 4பல்வேறு துறைகளில் தரநிலைகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் BIS-இன் பங்கு பாராட்டப்பட்டது.
- 5எரிசக்தித் துறையில் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தரநிலைகளின் முக்கியத்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.