TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

நினைவேந்தல்/நிகழ்வு

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று (15.10.2026) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர் இன்று (15.10.2026) சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா தம்பதியருக்கு மகனாக 15–10–1931 அன்று பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை இராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியிலும், பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். 1960-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இந்திய இராணுவத்துக்கு தேவையான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்தது, SLV, SLV-3, ரோகிணி-1, செயற்கைக்கோள் ஏவுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றினார். திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் இவர் திட்ட இயக்குநராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது, 1990-ஆம் ஆண்டு "பத்ம விபூஷன்" விருது, 1997-ஆம் ஆண்டு "பாரத ரத்னா" விருது என பல்வேறு உயர்ந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1999-ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்ததுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு எடை குறைந்த கால்களையும் (Calipers) வெற்றிகரமாக உருவாக்கினார். 2002-2007ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகப் பதவி வகித்தார். இவர் "அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, வெளிச்சப் பொறிகள், மிஷன் இந்தியா, திருப்புமுனைகள் : சவால்களுக்கு இடையே ஒரு பயணம், எனது பயணம்," உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.அருள் பிரகாசம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மரியாதை செலுத்தினர்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்