டாக்டர் அம்பேத்கர் விருது-2026-2027
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக அரிய தொண்டாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருது 2026-2027 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விரிவான சுருக்கம்
2026-27ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது, தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக அரிய தொண்டாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்படவுள்ள இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவங்களை www.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம், ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விருதினை பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள்/சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026. மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை / ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முக்கிய அறிவிப்புகள்
- 1டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
- 2விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் வழங்கப்படும்
- 3விண்ணப்பப் படிவங்கள் இணையதளம், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கிடைக்கும்
- 4விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2026
- 5மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை / ஒப்புதலுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்