மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.10.2026) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகைதந்து, தற்போதைய வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.10.2026) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகைதந்து, தற்போதைய வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் ஒருங்கிணைந்த பல்வகைப் பேரிடர் கண்காணிப்புக் கட்டமைப்பை (Integrated Multi-Hazard Monitoring Dashboard) பார்வையிட்டார். இக்கட்டமைப்பு, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. இதில் மழையளவு, வானிலை முன்னறிவிப்புகள், புகார்களைக் கண்காணிப்பதற்கான அழைப்பு மையப் பலகை, நீர்த்தேக்க நீர்மட்ட விவரங்கள், வானிலை ரேடார் படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற தகவல்கள் அடங்கும். மாநில அவசரகால செயல்பாட்டு மையமானது மழையளவு மற்றும் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக, வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், தொடர்புடைய அனைத்துத் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்தல், வானிலை எச்சரிக்கைகளின் அடிப்படையில் உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியது. வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
- 2வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.