எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) கீழ் நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
விரிவான சுருக்கம்
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். 2026ஆம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்றும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதீத மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) யின் கீழ் பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க ஆணையிடப்பட்டது. இக்குழு மாநிலத்தின் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை குறைப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ள மாநில அரசின் தயார் நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே எதிர்கொண்டு, பொதுமக்களின் உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்தல்
- 2மாநிலத்தின் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல்
- 3பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல்
- 4முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்
- 5வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை குறைப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல்
- 6காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ள மாநில அரசின் தயார் நிலையை மேம்படுத்துதல்