TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

விருது / அங்கீகாரம்

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருதை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம்காண்பித்து வாழ்த்து பெற்றனர்

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழ்கள் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம் காண்பிக்கப்பட்டு வாழ்த்து பெறப்பட்டது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. நா. ஆனந்த் அவர்களை (22.10.2026) அன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை அரசு செயலாளர் திரு. பிரசாந்த் மு. வடநேரே, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) திரு. எஸ். கோபாலகிருஷ்ணன், மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப்பொறியாளர் திரு. எஸ். ரமேஷ் மற்றும் நாகர்கோவில், கோதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருமதி ஆ.வசந்தி ஆகியோர் சந்தித்து, பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றனர். பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID), நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாசனக் கட்டமைப்புகளில், பாசன வேளாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கட்டமைப்புகளைத் தேர்வு செய்து, உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்புகளாக அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1906-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பேச்சிப்பாறை அணை, 2026-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மார்செல் நகரில் நடைபெற்ற பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் 26-வது பன்னாட்டு மாநாடு மற்றும் 77-வது பன்னாட்டு செயற்குழுக் கூட்டத்தின்போது, 14.10.2026 அன்று விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பேச்சிப்பாறை அணைக்கு 2026-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது வழங்கப்பட்டது.
  • 2
    விருது மற்றும் சான்றிதழ் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. நா. ஆனந்த் அவர்களிடம் காண்பிக்கப்பட்டு வாழ்த்து பெறப்பட்டது.
  • 3
    பன்னாட்டுப் பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID) இந்த விருதை வழங்கியது.
  • 4
    பிரான்ஸ் நாட்டின் மார்செல் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் 14.10.2026 அன்று விருது வழங்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்