TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

பணி நியமனம்வீட்டுவசதிஅரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் இன்று (10.11.2026) வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சமூகத்திலுள்ள அனைத்து வருவாய் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச் சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் பல அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டிடங்கள். மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலியிடப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு இன்றைய தினம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
  • 2
    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலியிடப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்