குறிச்சொல் செய்திகள்
#Public Service Commission
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Service Commission குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
10 நவ., 2026PR #1020
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.வே.சிவா அவர்கள் இன்று (10.11.2026) வாரியத் தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் நில அளவையர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.