குறிச்சொல் செய்திகள்
#Aadhav Arjun
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Aadhav Arjun குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 ஜூலை, 2026PR #467
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணை, 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ்அர்ஜுனா அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.